fbpx
Homeபிற செய்திகள்கடலூர்- சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் 13 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி...

கடலூர்- சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் 13 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர்- சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் 13 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களின் சாலை போக்குவரத்தை மேம் படுத்தவும் கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையிலும் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஏராளமான பஸ் சேவைகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பஸ் சேவைக்கு பயன்ப டுத்த இயலாத பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார் பில் கடலூர் -சென்னை உள் ளிட்ட வழித்த டங்களில் 13 புதிய அரசுபஸ்கள் இயக்க தொடக்க விழாகடலூர் பஸ் நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், மாநகராட்சிமேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து கழக கடலூர் மண்டல பொது மேலாளர் ராகவன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு 13 புதிய பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்
.
அதன்படி கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் வழியாக பண்ருட்டிக்கும், கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி, சத்திரம் வழியாக ஆயிப்பேட்டைக்கும், கடலூ ரில் இருந்து ஆலப் பாக்கம், திருச்சோபுரம் வழியாக சித்திரைப்பேட்டைக்கும், கடலூரில் இருந்து சிலம்பிமங்கலம் வழியாக சாமியார் பேட்டைக்கும், சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டு மன்னார் கோவிலுக்கும் சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் வழியாக பரங்கிப்பேட்டைக்கும், வடலூரில் இருந்து மேட் டுக்குப்பத்திற்கும், குறிஞ்சிப்பாடியில் இருந்து சாத்தப் பாடி, புவனகிரி வழியாக சிதம்பரத்துக்கும் மகளிர் விடியல் பயணமாக நகர பஸ்கள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.இது தவிர புறநகர பஸ்களாக, கடலூரில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம் வழியாக கிளாம் பாக்கத்திற்கும், கடலூரில் இருந்து விருத் தாசலம், பெரம்ப லூர் வழியாக திருச்சிக்கும், சிதம் பரத்தில் இருந்து விருத் தாசலம், ஆத்தூர் வழியாக சேலத்திற்கு 2 அரசு பஸ்கள், வடலூரில் இருந்து கடலூர், புதுச்சேரி, திருவான்மியூர் வழியாக கோயம்பேடுக்கும் அரசு பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜெயக்குமார், போக்குவ ரத்து கழகத் துணை மேலாளர்கள் ரகுராமன், கிருஷ்ணமூர்த்தி, பரிமளம் தொ.மு.ச. தங்கஆனந்தன், பழனிவேல், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img