சிதம்பரத்தில் ஸ்ரீ மஹாவீர் ஜெயின் அசோசியேஷன், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மற்றும் காம்தார் பவர்லால் சாயர் பாய் நினைவாக சஞ்சல்ராஜ் ராஜேந்திகுமார் கோத்தாரி குடும்பத்தில் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மஹாவீர் ஜெயின் பவனில் நேற்று நடைபெற்றது.
இம்முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் வர்ஷா, ராதிகா, தாஸ்மியா ஆகியோர் நோயாளிகளுக்கு கண் சிகிச்சை வழங்கினர். இதில் கண் நோய், கண் பார்வை குறைபாடு கண்விழி மற்றும் கண்ணில் நீர்வழிதல், கண்புரை கண் சார்ந்த நோயாளிகள் 205 பயனாளிகள் கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றனர். இலவசமாக கண் மருந்துகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 66 பேர் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இம்முகாமை தலைவர் விஷால் ஜெயின், செயலாளர் கபில் ஜெயின், பொருளாளர் அரிஹந்த் ஜெயின் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து, விஷால் ஜெயின், கபில் ஜெயின்,அரிஹந்த் ஜெயின், ராஜேந்திர குமார் கோத்தாரி, அரிஹந்த் கோத்தாரி, ஆனந்த், மகாவீர் கோத்தாரி, நிர்மல், விஜய் டேலிடா, லோகேஷ்லலித் மேத்தா, திலீப், அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயனாளிகள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.