கோவை ஒண்டிப்புதூர் வார்டு எண் 56 பகுதியில், ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால்கள், புதிய தார்ச் சாலைகள், பாதாள சாக்கடை பணிகளுக்கு தோண்டிய இடங்களில், சாலைப் பராமரிப்பு பணிகள், சூயஸ் குடிநீர் விநியோகம் இணைப்பு பணிகள் உள்ளிட்ட பல் வேறு பணிகளை, மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தொடங்கி வைத்தார்.
கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டார்.
திமுக பொதுக்குழு ஆடிட்டர் சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி -1 திமுக துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பன்னீர்செல்வம் 56 வது வட்டக் கழகச் செயலாளர் த.சுரேஷ்குமார், வட்டக் கழக நிர்வாகிகள் சிவா, ராஜேந்திரன், கங்காநகர் சின்னச்சாமி, சிங்கை சவுந்தர், சந்திரசேகர், ராஜேந்திரன், கனகராஜ், எம்.வேலுமணி, சாந்தா மணி, தேவராஜ், சந் தோஷ், ராஜேந்திரன், சிவக்குமார், சதீஷ், செந் தில்வேல், ராஜசேகர், சண்முகம், தனமணி, சுஜிதா, சிவகாமி, அன்பழ கன், வணங்காமுடி, செந் தில்குமார், மனோ கரன், பஷீர்பாய், சத்திய மூர்த்தி, வெங்கடேஷ், ஆறுமுகம், ராஜேஸ்வரி, கமலக்கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண் டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.