fbpx
Homeபிற செய்திகள்கோவையில் புதிய ‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் அறிமுகம்

கோவையில் புதிய ‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் அறிமுகம்

பியூர் நிறுவனம் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் புது தயாரிப்பான ‘பியூர்-பவர்’ எனும் மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன மின் சேகரிப்பு அமைப்புகளை ‘பியூர்-பவர் ஹோம்‘ மற்றும் ‘பியூர்-பவர்’ கமர்சியல் என தனித்தனி தயாரிப்புகளாக இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

‘பியூர்-பவர்’ தயாரிப்புகள் மிகப்பெரும் அளவில் மின்சார ஆற்றலை சேமித்துவைக்க கூடிய அதிநவீன பேட்டரிகளை கொண்டவை என்பதால் அத னால் மின் சாரத்தை அதிகம் சேமித்து வைக்க முடியும்.

கோவையில் இந்த தயாரிப்புகளை பியூர் நிறுவனத் தின் நிறுவனர் டாக்டர் நிஷாந்த் டோங்கரி மற்றும் நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுராம் அர்ஜுனன் உடன் இணைந்து அறிமுகம் செய்து வைத்தனர்.

இது குறித்து டாக்டர் நிஷாந்த் கூறுகையில், “பியூர்-பவர் கமர்சியல் அமைப்பு மூலம் தொழில்நிறுவனங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான மூலதன செலவு மற்றும் செயல் பாட்டு செலவு குறையும்“ என்றார்.


டாக்டர் ரகுராம் அர்ஜுனன் பேசுகையில், “ மேக் இன் இந்தியா தயாரிப்பான ‘பியூர் பவர்’, வணிக செயல்பாடுகளில் இதற்கு முன்பு நாம் காணாத மிகவும் தேவையான மின் கட்டண சேமிப்பை வழங்கும்.

இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு வகையான புதுமை படைப்பு” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img