கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனையில் புதிதாக கான்டோரா லாசிக் கருவியின் துவக்க விழா நடந்தது. இந்த லாசிக் சிகிச்சை வசதியை பிரபல திரைப்பட நடிகை மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் டி.எம். சுப்பாராவ் தலைமையுரை ஆற்றினார். கவுரவ விருந்தினராக ரோட்டேரியன் செல்லா. கே. ராகவேந்திரன் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் பேசினார். விழாவில் அனைவரையும் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் வரவேற்றார்.
இதில் மருத்துவ இயக்குனர், முதுநிலை கண் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் முகமது ஷபாஷ் பேசுகையில், “இந்த சிகிச்சையில் கண் கருவிழியில் மிகவும் துல்லியமாக செயல்பட்டு, பார்வையை சரி செய்யும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை, பார்வை குறைபாடுகளை சரி செய்யும்“ என்றார்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் பேசுகையில், “டிரினிட்டி கண் மையத்தில் கண்களின் தன்மைக்கும், குறைபாடுகளுக்கும் ஏற்றவாறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார். இந்நிகழ்வில், மருத்துவ செயல் இயக்குனர், பிறழ்நிலை விழிப்படலம் அறுவை சிகிச்சை முதுநிலை ஆலோசகர் டாக்டர் மதுசூதனன் நன்றி தெரிவித்தார்.
டிரினிட்டி கண் மருத்துவ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாஸ்மின், கேட்ராக்ட் முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.