fbpx
Homeபிற செய்திகள்பள்ளிக்கு மேஜைகள், இருக்கைகள் வழங்கிய தூத்துக்குடி ரோட்டரி சங்கம்

பள்ளிக்கு மேஜைகள், இருக்கைகள் வழங்கிய தூத்துக்குடி ரோட்டரி சங்கம்

தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் தூத் துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்கள் அமர்வதற்கு மேஜை மற்றும் இருக் கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் புளோரா ஜூவானிட்டா தலைமை தாங்கி உரையாற்றினார். ரோட்டரி சங்கத் தலைவர் சொர் ணமணி குமார் மற்றும் செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தனர்.

தலைமையாசிரியர், நல்லாசி ரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று பள்ளியின் சிறப்பை எடுத்துக் கூறினார். அதனை தொடர்ந்து பள்ளிக்கு ஒன்பது செட் மேஜை மற்றும் இருக்கைகள் வழங் கப்பட்டது. தலைமை யாசி ரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img