ஈரோடு ஜெம் மருத்துவமனை, பவானியை சேர்ந்த கவிதா என்ற (52) பெண்ணுக்கு கர்ப்பப்பையில் கடந்த இரண்டு வருடங்களாக வளர்ந்து வந்த 10 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளது. மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் கே.எல்.சதீஷ்குமார் கூறுகையில் சென்னையில் ஒரு பெண்ணுக்கு 12 கிலோ எடையுள்ள கட்டிய அகற்றப்பட்டது.
அதை எடுத்து மிகப் பெரிய அளவில் இக்கட்டி உள்ளது. கர்ப்பப்பையுடன் கட்டி அகற்றப்பட்டது. இது ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. இது புற்றுநோய் கட்டி இல்லை என்பதால் அவர் நலமுடன் உள்ளார், என்றார்.