இந்தியன் இன்ஸ்டிடி யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கோழிக்கோடு, மேலாண்மையில் அதன் மிகப் பிரபலமான எக்ஸிகியூட் டிவ் முதுகலை கல்வித்திட்டத்தின் 18வது பேட்ச்சிற்கான சேர்க்கை தொடங்கப்படுவதை அறிவித்துள்ளது.
நேர்த்தியாக வடிவ மைக்கப்பட்டிருக்கும் கலவையான எம்பிஏ கல்வித்திட்டமானது 2 ஆண்டுகள் கால அளவைக் கொண்டிருக்கிறது. உலகளாவிய தர அளவு கோல்களுக்கும் மாறி வரும் தொழில்துறை தேவைகளுக்கும் இணக்க மான உலகத்தரத்திலான எக்ஸிகியூட்டிவ் கல்வியை வழங்குவதில் ஐஐஎம்கே கொண்டிருக்கும் தொடர்ச்சியான தலை மைத்துவ நிலையை இக்கல் வித்திட்டத்தின் அறிமுகம் முன்னிலைப்படுத்துகிறது.
மேலாண்மையில் இ.பி.ஜி.பி.யின் 18வது பேட்ச் தொடக்க நிகழ் வை தொடர்ந்து பட் டப்படிப்பை முடித்து வெளியேறும் 15வது பேட்ச் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 615 மாணவ மாணவியர் இடம் பெற்றிருந்தனர். இந்த கண்கவர் நிகழ்ச்சியில் ஐஐஎம் கோழிக்கோடின் இயக்குனர் பேராசிரியர் தெபாஷிஸ் சாட்டர்ஜி சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் நாராய ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து, பேராசி ரியர் தெபாஷிஸ் சாட்டர்ஜி பேசுகையில், “உலகளாவிய பிசினஸ் தலைவர்களை உருவாக்குவதில் எமது அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கி றோம்“ என்றார்.
க்யூஎஸ் வேர்ல்டு யுனிவர்சிட்டி தரவரிசை யால் ஆசியாவில் முதன் மையான எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ கல்வித்திட்டங்கள் பட்டியலில் இடம்பெற்று உலகளாவிய அங்கீகா ரத்தை கொண்டிருக்கும் இந்த இ.பி.ஜி.பி., ஒவ் வொரு ஆண்டும் புதிய சாதனைகளை படைக் கின்ற பங்கேற்பை தொட ர்ந்து கண்டு வருகிறது.