fbpx
Homeபிற செய்திகள்நீர் மோர் பந்தலைத் துவக்கி வைத்த திமுக மாவட்ட செயலாளர் ரவி

நீர் மோர் பந்தலைத் துவக்கி வைத்த திமுக மாவட்ட செயலாளர் ரவி

கோவை எஸ்.எஸ்.குளம் குரும்பபாளையத்தில் கோடை வெயிலுக்கு தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதனை பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், இளநீர் வழங்கி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.


நிகழ்வில் சர்க்கார் சாமகுளம் ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ் குமார், கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப் பாளரும் பிரச்சார குழு செயலாளருமான உமா மகேஸ்வரி, மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் ந.மாலதி, மாநில கலை இலக்கிய பகுத் தறிவு பேரவைத் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், பேரூர் கழகச் செயலாளர் சுரேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரங்கநாயகி, பேரூராட்சி தலைவர் கோமளவல்லி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img