தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்“ சார்பில், இஸ்லாமிய மாணவர்களுக்கான இரண்டாவது மாநில உயர் கல்வி மாநாடு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்றது.
சிறுபான்மை சமூகத்திற்கு கல்வி ரீதியாக தமிழ்நாடு அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜியாவுதீன், விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.