கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் தாலுக்கா, மேல பகுதி ஊராட்சியில் உள்ள கீழ ஆன கவுண்டன்பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கட்டிடத்தை இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.
பிறகு நியாய விலை கடையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கடவூர் ஒன்றிய செயல £ளர், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய கட்டிட திறப்பு விழாவை சிறப்பித்தனர்.