fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளர்களுடன் எஸ்சி-எஸ்டி நல ஆணைய உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கலந்தாய்வு கூட்டம்

தூய்மைப் பணியாளர்களுடன் எஸ்சி-எஸ்டி நல ஆணைய உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கலந்தாய்வு கூட்டம்

மேட்டுபாளையம் தமிழ் சங்கம் அரங்கில் உள்ளாட்சித் துறை தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு எஸ்சி-எஸ்டி நல ஆணைய உறுப்பினர் எஸ்.செல்வகுமார், வழக்கறிஞர் -சி.வெண்மணி, காரமடை ஸ்ரீஅருந்ததி பொதுநல அறக்கட்டை மேலாண்மை கட்டளைதாரர் நடராஜன், தலைவர் துரைசாமி, பொருளாளர் நஞ்சப்பன், துணைசெயலாளர் ராஜன், உறுப்பினர் சி.கண்ணன், மற்றும் பேரூர்ஸ்ரீ அருந்ததியர் சமூக அறக்கட்டளை பொருளாளர் திருமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதில் சிறுமுகை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மற்றும் காரமடை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டு அவர்களின் குறைகளை எஸ்சி – எஸ்டி நலத்துறை ஆணைய உறுப்பினர் எஸ்.செல்வகுமாரிடம் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img