fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி கூறி ஆட்சி அமைத்த தமிழக அரசை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்யாததால் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி 4 ரோட்டில் இருந்து அரசு மருத்துவமனை வரை சாலையின் ஓரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மெழுகுவத்தி ஏந்தி அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வ.முல்லைவேந்தன், விவசாயப் பிரிவு மாநில தலைவர் டி.ஆர். அன்பழகன், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

இந்த போராட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி மற்றும் சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img