சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு தேவை என்று சிலை கடத்தல் பிரிவு எஸ்.பி. வடுகம் சிவக்குமார் கூறினார். அவர் எழுதிய சைபர் கிரைம் குற்றத் தடுப்பு 1930 என்ற கவிதை குறுந்தகடு ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வெளியிடப்பட்டது கல்லூரி தலைவர் வி.சண்முகன் குறுந்த கட்டை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது: பாம்பே கஸ்டம்ஸ் அலு வலகம், காவல் அலுவலகம் என்று நேரடியாக இப்போது போன் செய்து உங்கள் பெயரில் போதைப் பொருள் பார்சல் வந்துள்ளது என்பார்கள்.
அதனால் உங்களை டிஜி ட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டுவார்கள். உடனே பயந்து போய் அவர்கள் கேட்ட பணத்தை பலர் அனுப்புகிறார்கள். நாம் நல்லவர்களாக இருந் தால் ஏன் பயப்பட வேண்டும்? உங்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு விழுந்துள்ளது. அதற்காக முன் பணம் அனுப்புங்கள் என்பார்கள்.
எனவே இந்த வலைதள சூழ்ச்சியிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோன்று நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுவார்கள். நாமே கூட தெரியாமல் பணத்தை வேறு ஒரு நபருக்கு ஆன்லைன் முறையில் அனுப்பி விடுவோம். இதையெல்லாம் எல்லாம் தடுப்பதற்காக தான் 1930 எண் காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
தெரியாமல் பணத்தை நாம் வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு அனுப்பினால் கூட இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் அந்த பணம் எடுக்கப்படாமல் தடுக்கப்படும். செல்ஃ போன் பேங்க் அக்கவுண்ட் வைத்துள்ள அனைவரும் 1930 குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வலைதளம் மோசடி மூலம் லட்சக்கணக்கில் பணத்தை பலர் இழந்துள்ளனர். தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள். தினசரி செல்போனை பயன்படுத்துபவர்கள் தங்கள் படங்களைக் கூட செல்போனில் அதிகம் வைத்திருக்கக் கூடாது. மாஃபிங்செய்து நீங்கள் பேசுவது போல செய்வார்கள்.
செல்போன் எந்த அளவுக்கு நமக்கு பயன்பாடு உள்ளதோ அந்த அளவு கெட்டதாகவும் உள்ளது. எனவே தான் மக்களிடையே இந்த 1930 எண்ணை அதிகம் கொண்டு செல்ல இந்தக் குறுந்தகடு வெளியிடப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், முதல்வர் டாக்டர் ரகுபதி, செல்வா சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் பாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.