fbpx
Homeபிற செய்திகள்அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு

அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூர் – ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சூர் – ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கடந்த 2006-07ம் ஆண்டு 10ம் வகுப்பு, 2008-09ம் ஆண்டு 12ம் வகுப்பு பயின்ற சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் கல்துகொண்டனர். முன்னாள் மாணவர் சத்தியராஜ் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் ஒருங்கிணைப்பில், பிரியா மற்றும் விஷ்ணு ஆகியோரது தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லியோன் முன்னிலையில் நடந்தது.

அப்போது முன்னாள் மாணவ, மாணவியர்களின் தங்களின் தற்போதைய குடும்ப வாழ்க்கை மற்றும் பணிபுரியும் அனுபவங்கள், பள்ளி பருவத்தின் போது நடந்த சுவராசியமான நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பேசினர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு ஆர்.ஓ.குடிநீர் சுத்திகாப்பன் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி நினைவு பரிசினை வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் வேலு, பள்ளி மேலாண்மை குழு தலைவி அம்மு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில், குண்டலப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமர்நாத், கணித ஆசிரியர் பெருமாள் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர் சஞ்சய் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img