fbpx
Homeபிற செய்திகள்பிரபல ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என பெயர் மாற்றம்

பிரபல ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என பெயர் மாற்றம்

இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக செயல்படும் ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், நிறுவனத்தின் வளர்ச்சி, புதுமை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் மேம்பட்ட சேவைகளை வழங்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகும் என நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

எப்எம்சிஜி, மருந்து, ரசாயனப் பொருட்கள், விவசாய உற்பத்திகள் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட பல் துறைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய லாஜிஸ்டிக்ஸ் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் தனது சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த உள்ளது.

இந்த மறுபெயரிடல் குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரி ஹர சுதன் கூறியதாவது:

இந்த மாற்றம் ஒரு பெயர் மாற்றம் மட்டுமல்ல. இது எங்கள் வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

இந்தியாவில் கிடங்கு மற்றும் சரக்கு மேலாண்மை சேவைகளை விரிவுபடுத்த, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர்தர சேவைகளை வழங்குவதே எங்கள் இலக்காகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img