சென்னையில் உள்ள அகாடமி ஆப் அட்வான்ஸ் டு டென்டிஸ்ட்ரி பல் மருத்துவப் பள்ளியின் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 20வது பேட்ச் துவக்க விழா கிளாரியன் ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களையும், புதிதாக சேரும் மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் டாக்டர் ராமசாமி மற்றும் குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மகேஷ் வர்மா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் டாக்டர் சங்கர் ஐயர் வர வேற்றார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இந்தப் பள்ளியின் முதல் பேட்ச் மாணவர்களின் சாதனை களை கூறி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் 19வது பேட்ச் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கினர். 1வது மற்றும் 19வது பேட்ச் முன்னாள் மாணவர்கள் பலர் தங்களின் அனுப வங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக வடிவேல் குமார் நன்றி உரையாற்றினார்.