சிதம்பரம் அருகே வடிகால் அமைத்தல், வாய்க்கால் தூர் வாரும் பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கோத்ராம் சர்மா நேரில் ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி தாலுகா,கீழ்பரவனாற்றை தூர்வாரி,அருவாள்மூக்கு என்ற இடத்தில் கடைமடை ஒழுங்கியம் கட்டுதல் மற்றும் கடலுக்கு நேரடியாக வெள்ளநீர் வடிகால் கால்வாயை உருவாக்கும் பணி ரூ.81.12 கோடி நடைபெறுவதை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 92 பணிகளுக்கு 675 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 207 பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் சிதம்பரம் வட்டத்தில் உள்ள அனுவம்பட்டு மேல்மட்ட வாய்க்கால் தூர்வாரும் பணி ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் சி.தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில் தில்லைநாயகபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டிலும் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து வீராணம் ஏரி மேம்படுத்தும் திட்டப்பணியினை முதல்- அமைச்சரின் அறிவிப்பு பணியில் வெளியிட்டார்கள். இப்பணித்தளத்தினை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் கடலூர் கண்காணிப்புப் பொறியாளர் மரியசூசை,செயற்பொறியாளர் கு.காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் ஐயந்துரை, புகழேந்தி, ரமேஷ், பாசிமுத்தான் ஓடை பாசன சங்கத்தலைவர் ரவீந்திரன் மற்றும் தில்லைநாயகபுரம் வாய்க்கால் பாசன சங்கத்தலைவர் சிவக்குமார் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.