கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரில் அதியமான் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சமூக சேவைக்காக, கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குனர் சக்திகிரிக்கு இண்டர்நேஷனல் அச்சிவர்ஸ் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பழனிவேல், நடிகர் பட்டிமன்ற நடுவர் விஜய் டிவி புகழ் மதுரைமுத்து மற்றும் ஜம்ப் , உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மோசஸ், செல்லதுரை, கள்ளக்குறிச்சி விசிக தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கினர்.