fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட விழிக்கண் குழு மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட விழிக்கண் குழு மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விழிக்கண் குழு மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கும் தீருதவித் தொகை நிலுவை குறித்து விரிவாக ஆய்வு செய்து அந்த தொகையினை கால தாமதமின்றி விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக மாவட்ட முழுவதும் காவல் நிலையத்தில் பதியப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் இக்கூட்டத்தில் நலக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டிய சாதி சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் நிலுவை குறித்து விரிவாக ஆராய்ந்து விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

மேலும் கடந்த 09.07.2024 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான விழிக்கண் குழு மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டத்தில் நலக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் சில பகுதிகளில் தேவையான சாலைகள் மற்றும் சுடுகாட்டுப்பாதை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, இது குறித்து தொடர்புடைய அலுவலர்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், செய்யார் சார் ஆட்சியர் செல்வி பல்லவி வர்மா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஏழுமலை, நலக்குழு உறுப்பினர்கள் பஸ்கா மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img