கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த 11ம் தேதி மாபெரும் அக்ரி இன்டெக்ஸ் 2024 கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக வந்து கண்டுகளித்து வருகின்றனர். 7 பிரமாண்ட அரங்குகளில் 500 பங்கேற்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர். காலை 9 மணிமுதல் மாலை 6.30 மணி வரை இக்கண்காட்சியை காணலாம்.