“வேளாண்மைக்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தர உறுதி’’ குறித்த மூன்று நாள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தால் கடந்த 26.2.2025 முதல் 28.2.2025 வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தமிழ்வேந்தன் இப்பயிற்சியைத் துவக்கி வைத்து பேசுகையில், “ஒரு வேளாண் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் திறமையான வல்லுநர்களின் பங்களிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றார்.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குநர் முனைவர் பி. ஜெயகுமார் பேசுகையில், “இது போன்ற பயிற்சிகள் பேராசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் உயர் தரத்தை எட்ட முடியும்“ என்றார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை கல்விக்கூடம் முனைவர் எஸ். செந்தில் விநாயகம் பேசுகையில், “உழவர்களின் கள பிரச்சனைகளுக்குப் பயனளிக்கும் புதிய தொழில்நுட்பங்களை உரு வாக்குவதற்குச் சிறந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்“ என்றார். வேளாண் நானோ தொழில்நுட்ப மைய பேராசிரிர் மற்றும் தலைவர் முனைவர் வி. கோமதி கூறுகையில், “வேளாண் தொழில்நுட்பங்களைச் சமீபத்திய முன்னேற்றமான தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை இணைத்து வேளாண் மக்களின் தொழில் நுட்பத் தேவையைப் பூர்த்திச் செய்ய ஏதுவாக இப்பயிற்சிப் பாடங்கள் உருவாக்கப்பட்டது” என்றார். பேராசிரியர் மா.இரா. சீனிவாசன் (வேளாண் பூச்சியியல்) வரவேற்புரையும், பேராசிரியர் த.சம்சாய் (வேளாண் ஊரக மேலாண் மை) நன்றியுரையும் வழங்கினர்.
பல்கலைக்கழக வல்லுநர்கள் மற்றும் பிற அரசு மற்றும் தனியார் நிறுவன வல்லுநர்களின் உதவியோடு, வேளாண் கல்வி மற்றும் வடிவமைப்பு குறித்தச் சிந்தனைகள், தர உறுதிப்பாட்டிற்கான அங்கீகாரம் மற்றும் தர வரிசை, தரவு பகுப்பாய்வு, தரவை விளக்குதல் மற்றும் குறிப்பு மேலாண்மை போன்ற சமீபத்திய தொழில் நுட்பங்கள் மட்டுமின்றி மன அழுத்த மேலாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிர் தொழில் நுட்ப மகத்துவ மையத்தின் திட்ட இயக்குநர், முனைவர் எஸ். மோகன்குமார் இப்பயிற்சியில் பங்கேற்றவர்களைப் பாராட்டி வாழ்த்தினார்.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குநர் முனைவர் பி. ஜெயகுமார் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் வி.பாலசுப்ரமணி, ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று தங்களது வாழ்த்துரையினை வழங்கினர்.
இதுவரை 16 தொடர் பயிற்சிகள் பேராசிரியர்கள், அலுவலகப் பணி யாளர்கள், தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முதல்வர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மற்றும் நேபாளத்தில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் இரா. சசிகலா (இதழியல்) வரவேற்புரையாற்றினார். இணைபேராசிரியர் முனைவர் க. கணேசன் (வேளாண் பூச்சியியல்) தனது நன்றி உரையினை வழங்கி னார்.