fbpx
Homeபிற செய்திகள்வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு

வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்க லைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாண வர் சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளமறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப் படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவு களுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப்பிரிவில் 371 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் இளமறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை பெறப்பட்டது. அதன்படி, மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என 29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை யடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட் டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறிய தாவது: நடப்பாண்டில் பிளஸ்2- வில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்கள் 27,300 பேர் மற்றும் தொழில்முறையில் வேளாண்மை படித்த மாணவர்கள் 1,900 பேர் என மொத்தம் 29,969 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்க ளுக்கான தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 200-க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர். மேலும், இன்று (19-ம் தேதி) மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இவர்களுக்கு இன்று அட்மிஷன் நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும் ஜூன் 22,23,24 கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம் போல் திறக்காமல் புது மையான முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு வேளாண்மை குறித்து களநிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாண1வர்களுக்கு வேளாண்படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். இதனை தொடர்ந்து முதலா மாண்டு மாணவர் களுக்கு வகுப்புகள் வரும் செப்டம்பர் 15-ம் தேதி திறக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img