fbpx
Homeபிற செய்திகள்தாராபுரம் வட்டத்தில் வேளாண் பணிகள் திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு

தாராபுரம் வட்டத்தில் வேளாண் பணிகள் திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத் தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தாராபுரம் வட்டம், வரபாளையம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.150/- மானியத்தில் விதை வழங்கப்பட்டு 2.50 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருவதையும், பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 1.50 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பருத்தி சாகுபடி செய்து வருவது குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொப்பம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை மற் றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் தின் கீழ் ரூ.87,500/- மானியத்தில் 25 டன் கொள்ளளவு கொண்ட குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்.

தாராபுரம் வேளாண் உதவி இயக்குநர் லீலாவதி, துணை இயக்குநர் (தோட் டக்கலைத்துறை) (பொ) சந்திர கவிதா உதவி இயக்குநர் பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img