fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் முதல் ஏஐ தொழில்நுட்ப வணிக காப்பகம் அமைச்சர் டி.எம்.அன்பரசன் துவக்கி வைத்தார்

இந்தியாவின் முதல் ஏஐ தொழில்நுட்ப வணிக காப்பகம் அமைச்சர் டி.எம்.அன்பரசன் துவக்கி வைத்தார்

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ஆன்-பிரைமைஸ் AI நிறுவனமான HaiVE, AI வென்ச்சர் ஃபேக்டரியைத் தொடங்குவதற்கு செயின்ட் ஜோசப்ஸ் குழும நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளது. AI வென்ச்சர் ஃபேக்டரி என்பது AI ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப வணிக காப்பகம் (TBI) ஆகும்.

தமிழ்நாட்டில் புதுமையான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் முயற்சியில், StartupTN என்னும் முன்னெடுப்பின் மூலம் AI வென்ச்சர் தொழிற்சாலையை அரசு ஏற்றுக்கொண்டது. இது இந்தியாவின் முதல் அரசாங்க அங்கீகாரம் பெற்ற AI இன்குபேட்டர் ஆகும்.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறை அமைச்சர் டி.எம். அன்பரசன், HaiVE வாடிக்கையாளரும் முதலீட்டாளருமான Hiller Marine Australia-ன் இணை நிறுவனர் மைக்கல் ஹில்லர் ஆகியோர் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறையின் அமைச்சர் டி.எம். அன்பரசன் பேசியதாவது: பிசினஸ் இன்குபேட்டர்ஸ் எனப்படும் வணிக காப்பகங்களை ஸ்டார்ட் அப் டிஎன் (StartupTN) முன்னெடுப்பு மூலம் தமிழ்நாடு அரசு அதிகளவில் நிறுவியுள்ளது.

இந்த இன்குபேட்டர்கள் நிதி உதவியை வழங்குவதோடு, பல்வேறு துறைகளை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில்முனைவோரை இணைக்கும் தளமாக செயல்படுகின்றது. இவற்றின் கீழ் வழங்கப்படும் நிதி ஆதரவுக்காக வருடாந்திர பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க தொகையாக ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக வணிக காப்பகம் ஒன்றை HaiVE (ஹைவ்) நிறுவியுள்ளது. மாணவர்கள் மற்றும் பிற தொழில்முனைவோரின் யோசனைகள் மற்றும் திட்டங்களை வெற்றிகரமான தொழில் முயற்சிகளாக மாற்றுதல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை இதன் சேவைகளில் அடங்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img