fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் கல்லூரியில் விமானப்படை என்சிசி பயிற்சி முகாம்

இந்துஸ்தான் கல்லூரியில் விமானப்படை என்சிசி பயிற்சி முகாம்

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2 தமிழ்நாடு விமானப்படை என்சிசி சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.

அகில இந்திய அளவில் நடைபெறும் வாயு சைனிக் முகாமிற்கு மாணவ மாணவிகளை தயார் செய்ய துப்பாக்கி சுடுதல், டெண்ட் அமைத்தல், விமான மாதிரி வடிவமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

இந்த முகாமை என்சிசி கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் தலைமை வகித்து என்சிசி அலுவலர்கள் ஜெயிலூப்தீன், ரவி, பிரேம், பன்னீர் மற்றும் பயிற்சி அதிகாரிகள் சதீஷ், விகாஸ், ரவி, விஷாந்த், கிரண், சுகுமார், சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மாணவர்களை கல்லூரி நிர்வாக அலுவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் மற்றும் முதல்வர் ஜெயா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img