fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு முப்பெரும் விழா - அமைச்சர்கள் பங்கேற்றனர்: தேசிய செயலாளர்...

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு முப்பெரும் விழா – அமைச்சர்கள் பங்கேற்றனர்: தேசிய செயலாளர் செந்தில்குமாருக்கு விருது

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா (மைய – மாநில அரசுக்கு நன்றி பாராட்டு, 2025 ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் காலண்டர் – டைரி வெளியீடு, சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கல்) திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள “மாதவி பன்னீர்செல்வம்“ மஹாலில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் பொன் பரந்தாமன் வரவேற்றுப் பேசினார்.

மாவட்ட தலைவர் நரேஷ் சந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் சிவக்குமார், மனோ முருகன், சாகுல், ராம்காந்த், ஜெய்சங்கர், கோபிநாத், நாகராஜ், லோகேஷ், கண்ணன், நகர பொறுப்பாளர்கள் கங்காதரன், அக்பர் பாஷா, வாசுதேவன், சீனிவாசன், ராஜா, ஷா நவாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர், எ.வ.கம்பன், பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மேயர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமாருக்கு அவரது சேவையைப் பாராட்டி கோல்டன் விருதை அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி மற்றும் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் நிறைவேற்றிய 2500 சதுர அடி பரப்பளவு உள்ள மனையில் ஏழு மீட்டர் உயரத்திற்கு 3500 சதுர அடி வரை கட்டப்படும் தரைதளம் மற்றும் முதல் தளம் கட்டடத்திற்கு உடனடி அனுமதி பெறும் திட்டம், 750 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் மூன்று அடுக்குகள் வரை கட்டப்படும் எட்டு அலகு வீடுகளுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு, அதேபோன்று வணிக கட்டடங்கள் 300 சதுர மீட்டரில் கட்டப்படும் மூன்று அடுக்குகளுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு, தரைதளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டப்படும் கட்டிடங்களுக்கு உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டர் வரை உயரம் அதிகரிப்பு, 2016 ஆம் ஆண்டு வரை அனுமதியற்ற முறையில் பதிவு செய்துள்ள பட்டா மனைகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக தீர்வு, கிராம நத்தம் மனைகளுக்கு அனுமதி பெறுவதில் சலுகை, கட்டிட திட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் இனங்களில் முந்தைய ஆவணங்கள் கேட்பதில் இருந்து விலக்கு, புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு அணுகு சாலையில் சலுகை, ஒற்றைச்சாளர முறையில் கட்டடம், மனைப்பிரிவு, உட்பிரிவு உள்ளிட்ட அனுமதிகள், மாநிலம் முழுவதும் புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள், ஒருங்கிணைந்த முழுமை திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மைய அரசுக்கு மலிவு விலை கட்டிட திட்டங்களுக்கு வருமான வரியில் விலக்கு வேண்டும், கட்டுமான பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை தங்கத்துக்கு நிகராக குறைக்க வேண்டும் வருமானத்தின் மீதான வரிப்பிடித்தத்தின் வரம்பை உயர்த்த வேண்டும், முதல் மற்றும் இரண்டாம் வீடுகளை வங்கியில் கடன் பெற்று வாங்குபவர்களுக்கு வருமான வரியில் சலுகை வேண்டும், வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த திட்டமிட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ள 18000 ஏக்கர் நிலங்களை விடுவித்தமைக்கும், பதிவுத்துறையில் உதவி மையம், சேவை மையம் போலி ஆவண தடுப்பு நடவடிக்கைகள், மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் திட்டம், புதிய மண்டல, மாவட்ட, பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட திட்டங்களையும், வருவாய்த்துறையில் எங்கிருந்தும் எந்நேரத்திலும் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் எட்டாம் திட்டம் நில அளவைக்கு விண்ணப்பிக்கும் திட்டம், வீட்டுமனை பிரிவுக்கு மொத்தமாக பட்டா மாறுதல் திட்டம், கிராம நத்தம் மனைகளை இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம், இணையதளத்தில் கிராம நத்தம் நிலங்கள் சம்பந்தமான பதிவேற்றத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், தானியங்கி பட்டா மாற்றத்தில் உள்ள பிரச்சனைகள், சிக்கல்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.


மேலும் இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் ஜமாலுதீன், கமல் சந்த், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், நாராயணன், ஹனீப், ராஜேஷ்குமார், சக்தி பிரசன்னா, தனசேகரன், செங்கம் ஆனந்தன், சீனிவாசன், விக்னேஷ், எடத்தெரு விஜயராஜ், உதய சங்கர், மூகாம்பிகை மனோகரன், விஷால், மணி, பதம் சந்த், கஜேந்திரன், வினோத், சிவா, விமல், தர்மராஜ், குணால் சந்த், நகராஜ் செட்டியார், ஹர்ஷத், மாணிக்கம், அரிசி ஆனந்த், போளூர் ராஜேஷ், வினோத் உள்ளிட்டவர்களும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு பொறுப்பாளர்கள் செந்தில்குமார், ஜெயச்சந்திரன், சந்திரசேகர், கிருஷ்ணகுமார், ஜவகர், தமிழரசன், ஜெய்சங்கர், பிரேம், முனைவர் உசைன், கார்த்திக், ஜெயராமன், மாநிலக் குழு பொறுப்பாளர்கள் சிவக்குமார், கண்ணன், மாறன், ராஜா, உதயகுமார், கிளமெண்ட் ரொசாரியோ, கணேஷ்குமார், அன்பரசு, முத்துக்குமார், பரஞ்சோதி பாண்டியன், ராஜா முகமது, பால் அண்ணா, முத்துராமன், சுரேஷ், வெங்கடேசன், உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் நகரத் தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img