fbpx
Homeபிற செய்திகள்அமேசானிடமிருந்து பேமெண்ட் சேவை வழங்குநர் அங்கீகாரத்தை பெற்ற ஸ்கைடோ

அமேசானிடமிருந்து பேமெண்ட் சேவை வழங்குநர் அங்கீகாரத்தை பெற்ற ஸ்கைடோ

ஸ்கைடோ, அமேசான் நிறுவனத்திடமிருந்து “பேமெண்ட் சேவை வழங்குநர்” (PSP) என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.

அமேசானின் உலகளாவிய இணைய சந்தை அமைவிடத்தில் விற்பனை செய்யும் லட்சக்கணக்கான இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சிரமமின்றி எளிதாக வெளிநாடுகளிலிருந்து பேமெண்ட்கள் பெறும் வாய்ப்பை இதன் மூலம் ஸ்கைடோ வழங்கும்.

இத்தகைய சேவையை வழங்கும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களுள் ஒன்றாக இதன் மூலம் ஸ்கை டோ தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இதன் வழியாக பாதுகாப்பான மற்றும் குறைவான செலவில் ஸ்கைடோ வழியாக பன்னாடுகளிடமிருந்து பேமெண்ட்களை அமேசானில் விற்பனை செய்யும் ஏற்றுமதியாளர்கள் பெற முடியும். இதற்காக HDFC வங்கியுடன் கூட்டாண்மையை மேற்கொண்டிருக்கும் ஸ்கைடோ RBI ஒழுங்குமுறை விதிகளுக்கு இணக்கமுடன் செயல்படும்.

தனது பேமெண்ட் தீர்வுகள் வழியாக, சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்வித சிரமமுமின்றி எளிதாக பணம் பெறும் திறனை 10,000-க்கும் அதிகமான இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஸ்கைடோ ஏற்கனவே வழங்கியிருக்கிறது.

2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து செய்யப் படும் மின்-வர்த்தக ஏற்றுமதியின் கூட்டுத்தொகையை 80 பில்லியன் யுஎஸ் டாலருக்கும் அதிகமாக ஏதுவாக்குவதற்கான தனது திட்டங்களை அமேசான் சமீபத்தில் அறிவித்திருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img