தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார் என்பதே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்ப இல்ல.. இறைவனடி சேர்ந்து விட்டார் என்று அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், திமுகவின் முக்கிய தலைவரான ஆற்காடு வீராசாமி அப்போது உயிரோடுதான் இருந்தார்.
பின்னர் EWS பிரிவில் வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு ளிஙிசி பிரிவினருக்கும் பொருந்தும் என அப்பட்டமான பொய்யை போகிற போக்கில் அண்ணாமலை கூறிச்சென்றார்.
ஆனால், முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமே அந்த ணிகீஷி இடஒதுக்கீடு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்தியாவில் இருக்கும் 1,80,000 க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில், கடந்த ஆண்டு ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை என்று அண்ணாமலை கூறினார். இதிலும் அவர் கூறிய பொய்யை உடனடியாக இணையதளவாசிகள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினர்.
அதோடு நிற்காத அண்ணாமலை, கடந்த மாதம், கோவையில் பேசும்போது, “1962 ஆம் ஆண்டு வரை மருதமலை கோயிலில் மின்சாரம் கிடையாது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை திமுக கொள்கையாகக் கொண்டிருந்தது.
திமுக சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிரானது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என கூறினார். அவரின் இந்த கருத்து அண்ணாமலைக்கு தமிழக வரலாறு சுத்தமாக தெரியாது என்பதை அனைவர்க்கும் உணரவைத்தது. காரணம், திமுக ஆட்சிக்கு வந்தது 1967-ம் ஆண்டுதான்.
1962 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை காங்கிரஸ் அரசு ஆண்டு வந்தது. சமீபத்தில் ஈரோட்டில் பாஜக மேடையில் பேசிய அண்ணாமலை, 1931 ல் கடைசியாக ஈரோட்டில் மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் பாரதியார் பேசினார் என தெரிவித்தார்.
ஆனால், பாரதியார் 1921-ம் ஆண்டே இறந்துபோனார் என்ற பள்ளி மாணவர்களுக்கு கூட தெரிந்த உண்மை ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு தெரியாமல் போய்விட்டது என இணையவாசிகள் ட்ரோல் செய்தனர்.
இதை போல ஏராளமான கருத்துக்களை அவர் சொல்வதும், பின்னர் அது பொய் என்றும் அண்ணாமலை தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் முன்னர் அம்பலப்பட்டு கொண்டே இருக்கிறார்.
அவர் சொன்ன இன்னும் பல பொய்ககளை பத்திரிகை ஒன்று பட்டியலிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளது.ஒரு அரசியல் தலைவருக்கு அதுவும் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். எதைச் சொன்னாலும் புள்ளிவிவரத்தோடு உண்மைத்தன்மையோடு உரைக்க வேண்டும். அப்போது தான் தலைவர் என்ற அந்தஸ்து நிலைக்கும்.
வடநாட்டில் வேண்டுமானால் பாஜக சொல்லும் பொய்கள் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களை அண்ணாமலை மட்டுமல்ல யாராலும் பொய்களைக் கூறி நம்ப வைக்க முடியாது.
சொல்லும் பொய்கள், தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அப்பட்டமாக அம்பலமாகி அண்ணாமலை மாட்டி கொண்டே இருக்கிறார். அவர் சொல்லும் பொய்கள் எதேச்சையாக வெளிப்பட்ட வார்த்தைகள் என அண்ணாமலை சொல்லமுடியாது. ஏனென்றால் அவர் ஐபிஎஸ் படித்தவர்.
இனியாவது அண்ணாமலை அவர்கள், பொய்களைப் புறம்தள்ளி, உண்மை பேசி அரசியல் செய்ய வேண்டும்!