fbpx
Homeபிற செய்திகள்‘கிரையோசெக்ஷன் தொழில்நுட்ப பயன்பாடு’ அண்ணாமலை பல்கலை.யில் பயிற்சித் திட்டம்

‘கிரையோசெக்ஷன் தொழில்நுட்ப பயன்பாடு’ அண்ணாமலை பல்கலை.யில் பயிற்சித் திட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழம், கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையம், கடல் அறிவியல் புலம் சார்பில் பரங்கிப்பேட்டையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி சபை (எஸ்.இ.ஆர்.பி) நிதியுதவியுடன் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் “கிரையோசெக்ஷன் தொழில் நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடு” குறித்த 7 நாள் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் மற்றும் பதி வாளர் பேராசிரியர் சீதாராமன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
பேராசிரியர் சௌந்தரபாண்டியன் வரவேற்றார்.

கடல் அறிவியல் புல முதல்வர்

கடல் அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் அனந்தராமன் தொடக்கவுரையாற் றினார். சிறப்பு விருந்தினராக அண்ணா மலைப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் பிரகாஷ், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய முதன்மை விஞ்ஞானியை நினைவு கூர்ந்து, இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4 மாணவர்களை பாராட்டி பயிற்சிக்கான கையேட்டினை வெளியிட்டார். பாரதிதாசன் பல் கலைக்கழக இணைப் பேராசிரியர் சந்தானம் சிறப்புரையாற்றினார்.

பயிற்சி இணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்து விளக்கினார். ஜெயக்குமார், கண்ணப்பன், முதன்மை விஞ்ஞானிகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உவர் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான மத்திய நிறுவனம், சென்னை மோகன்குமார், சித்தார்த்தன்,கலை புலம், எம்.பி.ஏ.துறை,கடல் வாழ் உயிரியல் உயராய்வு மைய ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இணைப் பேராசிரியர் மற்றும் அமைப்புச் செயலாளர் தெய்வசிகாமணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை இணை அமைப்புச் செயலாளர்களான பிரகதீஸ்வரன், முருகேசன், சரவணக்குமார், அண்ணாதுரை, இராமமுர்த்தி ,கோபாலகிருஷ்ணன், ஆன்சுஜி ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img