கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனமும், கே.ஆர் மருத்துவமனையும், கோவை ரோட்டரி எலைட் சங்கமும் இணைந்து போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை நடத்தினர்.
பெரியநாயக்கன்பாளையம் கே ஆர் மருத்துவமனையின் வளாகத்திலே இந்த ஓட்டம் துவங்கியது. பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் ஜும்பா நடனத்துடன் நிகழ்வானது துவங்கியது.
இந்த மாரத்தான் போட்டியினை பெரிய நாயக்கன்பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி துவக்கி வைத்தார்.
துவக்க விழாவில் கோவை ரோட்டரி எலைட் சங்கத்தின் தலைவர் மணிகண்டன், கே ஆர் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் திலகம் ராஜேஷ், யுனைடெட் கல்விக் நிறுவனத்தின் நிறுவனர் S.சண்முகம், யுனைடெட் கல்வி நிறுவ னத்தின் செயலாளர் அருண் கார்த்திகேயன், யுனைடெட் கல்வி நிறுவனத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரி முதல்வர்களும் பங்கேற்றார்கள்.
ஜூனியர் சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட் டியிலே 1500க்கும் மேற்பட் டோர் பங்கு பெற்றனர்.
இதில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.