fbpx
Homeபிற செய்திகள்ஜனவரி 30ம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஜனவரி 30ம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஜனவரி 30 ஆம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க கோரி தமிழ்நாடு பொதுமேடையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு பொதுமேடை அமைப்பினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதில் மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர். மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், `இந்திய மக்களால் தேச தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி தனது இறுதி காலத்தில் மதசார்பற்ற, சனாதனமற்ற இந்தியா அமைய வேண்டும் என முடிவு செய்தார்.

இதன் காரணமாக பார்பன நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுகொன்றார். மத ஒன்றுமையை வலியுறுத்திய காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் மதவெறி எதிர்ப்பு நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்` என தெரிவி த்தார்.

படிக்க வேண்டும்

spot_img