ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023-24ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேமலதா சுப்புலட்சுமி மோகன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.