ஆர்கா ஏஐ நிறுவனம், நோயாளி பராமரிப்பு, மருத் துவக் கல்வி மற்றும் நீண்ட ஆயுள் ஆராய்ச்சியை நோக்க மாகக் கொண்ட இரண்டு ஒத்துழைப்புகளை அறிவித்துள்ளது.
லாங்கிவிட்டி இந்தியா, ஐஐஎஸ்சி, பெங்களூரு மற்றும் கேரளாவின் பிலீவர்ஸ் சர்ச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடனான கூட்டாண்மைகள், சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு அதிநவீன தொழில்நுட்பத்தைக் குறிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஆழமான கற்றல், பகுப்பாய்வு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் ஆர்கா ஏஐயின் நிபுணத்துவத்துடன், லாங்கிவிட்டி இந்தியா, பரந்த அளவிலான ஆராய்ச்சித் தரவை திறமையாக செயலாக்குவதற்கும் விளக்குவதற்கும் மேம்பட்ட கருவிகளைக் கொண்டிருக்கும்.
“ஆர்கா ஏஐ உடனான எங்கள் ஒத்துழைப்பு, முதுமை மற்றும் நீண்ட ஆயுளின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கான எங்கள் முயற்சிகளில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.” என்று ஐஐஎஸ்சியின் பேராசிரியரும் லாங்கிவிட்டி இந்தியாவின் ஒருங்கிணைப் பாளருமான டாக்டர் தீபக் சைனி கூறினார்.
“எங்கள் மருத்துவமனை மற்றும் கல்வித் திட்டங்களுக்கு சமீபத்திய செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர ஆர்கா ஏஐ உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று பிலீவர்ஸ் சர்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் ரோஸி மார்செல் டி கூறினார்.
“வாழ்க்கை முறை சுகாதாரத் தரவு மற்றும் மூலக் கூறு தரவுகளுடன் மருத்துவ மெட்டாடேட்டாவை ஒருங்கிணைப்போம்“ என்று ஆர்கா ஏஐயின் நிறுவனர் ரோஹித்ராஜன் கூறினார்.