fbpx
Homeபிற செய்திகள்செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதுமைக் கல்வி முறை அறிமுகம்

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதுமைக் கல்வி முறை அறிமுகம்

தொழில்நுட்பத் தின் மூலம் கல்வியில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் வேல்யூ எய்டெட் டெல்டா வித் ஆர்டிபிஷல் இன்டலிஜென்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவை இந்தியக் கல்வி முறையில் எந்தவித தடையுமின்றி ஒருங்கிணைக்கும் அற்புதமான திட்டத்தை அறிவித்துள்ளது.

வேல்யூ எய்டெட் டெல்டா வித் ஆர்டிபிஷல் இன்டலிஜென்ஸ் நிறுவனர் ரோஹித் சுரேஷ் கூறியதாவது: மாணவர்களின் கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவின் மூலம் பதில் அளிப்பதன் மூலம் அது, இந்திய கல்வி முறையில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து
எங்கள் இணையதள செயல்பாடுகளை பார்த்து அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

மொழி பிரச்சினை மாணவர்களுக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இணையதளத்தில் உடனடி மொழி பெயர்ப்பு சேவையும் இடம் பெற்றுள்ளது.

மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். மொழி அவர்களின் கற்றலுக்கு ஒரு தடையாக இருக்காது.

அதேபோல் எங்களின் தரவுத்தளம் மாணவர்களின் கல்வி களஞ்சியமாக
இருந்து அவர்களின் திறமையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, அவர்களின் 6-ம் வகுப்பு முதல் பள்ளி இறுதியாண்டு வரை அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்தத் தரவு ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட பலம் மற்றும் ஆர்வங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஆலோசனைகள், பாடப் பரிந்துரைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img