fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்த வர்களால் கடைபிடிக்கப்படுகின்ற தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருப்பலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக் கொண்டு தவநாட்களை கடை பிடிக்க துவங்குகிறார்கள். அதன்படி, கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற் கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலி நேற்று காலை நடைபெற்றது.

இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருட் திரு.இசையாஸ் முன்னின்று நடத்தினார். இதில் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு தங்க ளுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு, தங்களின் தவமுயற்சிகளை துவங்கி னார்கள். தவக்காலத்தை கடைபிடிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட் களை தவிர்த்து சுத்த சைவ உணவுளை உட்கொள்ள வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவக்கால நாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப் பட்டார்கள்.

இதே போன்று, மாவட்டத்தின் பிற பகுதிகளான சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம், புஷ்பகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் தவக் கால சாம்பல் புதன் சிறப்பு திருப் பலிகள் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img