எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் லிமிட்டெடின் துணை நிறுவனமுமான எடிஎஸ் எல்ஜி, 2025ம் ஆண்டின் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் மாறுபட்ட தொழில்நுட்ப ஆட்டோமொட்டிவ் தீர்வுகளை வெளியிட்டது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பட்ட டயக்னோஸ்டிக்ஸ் சாதனங்களின் டெமோ போன்ற புதுமைகள் ஜனவரி 18 முதல் 21 வரை யஷோபூமியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ காம்பொனெண்ட்ஸ் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இது குறித்து நிறுவன மேனேஜிங் டைரக்டர் பிரவீன் திவாரி கூறுகையில்,
“ஏடிஎஸ் எல்ஜியில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய, நீடித்த, நம்பகமான தீர்வுகளின் மூலம் ஆட்டோமொட்டிவ் சேவைத் துறையை மீண்டும் வரையறை செய்வதே எங்கள் நோக்கம்.
இது எலக்ட்ரிக் மோபிலிட்டி மற்றும் புதிய தலைமுறை ஆட்டோமொட்டிவ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் இயக்கப்படும் துறையின் மாற்றத்துடன் முழுமையாக பொருந்துகிறது.
‘ஒன் ஸ்டாப் சொல்யூஷன்’ அறிமுகம் நம் பயணத்தில் முக்கியமான அடிக்கல் லாகும். இந்த தீர்வுகள் துறையின் மாறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப் பட்டவை” என்றார்.