தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் நடைப்பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு பாலக்கோடு அரிமா சங்க தலைவர் வக்கில் ராஜா மணி, முன்னாள் தலைவர்கள் கோவிந்த சாமி, சீனிவாசன், இயக்குநர் ராஜ கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நித்திய லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அதனை தொடர்ந்து மாவட்டத்தில் முதல் முறையாக தானியங்கி எந்ந்திரம் மூலம் ஐந்து ரூபாய் காயின் செலுத்தி ஒரு மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் எந்திரத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து பள்ளியில் கல்வி, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் முதுகலை ஆசிரியர் கலாவதி நன்றி தெரிவித்தார்.