ஜெர்மன் இந்திய வட்ட மேசை சந்திப்பு நிகழ்ச்சி கோயம்புத்தூர் ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. இந்நிகழ்வை, ஜெர்மன் இந்தியன் ரவுண்ட் டேபிள் கோவை கிளை தலைவர் டாக்டர் எஸ். சந்திரசேகர் மற்றும் ஜெர்மன் பிராங்பர்ட் தலைவர் டாக்டர். ஜோகன்னஸ் வெய்சர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில் தலைமை விருந்தினராக சென்னை ஜெர்மன் குடியரசு தூதரக அதிகாரி மைக்கேலா குச்லர் பங்கேற்றார்.
ஜெர்மனி வணிக ஆலோசனை சேவை நிறுவனம் அமிகார்ப், ஜெர்மனியின் மீது கவனம் செலுத்தவும், இந்தியாவின் ஐரோப்பிய முதலீட்டிற்கு வழியாக ஜெர்மனி உள்ளதையும் விளக்கினார்.
இந்நிகழ்வில் ஜெர்மன் இன்டியன் ரவுண்ட் டேபிள் கோவை கிளை நிறுவனர் கே.ராமசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஜெர்மன் நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள் ளன என விவரித்தார்.
தொடர்ந்து, ஜெர்மன் இன்டியன் ரவுண்ட் டேபிள் கோவை கிளை யின் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் பேசினார்.
ஜி.ஐ.ஆர்.டி., பிராங் பர்ட் தலைவர் மற் றும் ஜெர்மன் அந்நியச் செலாவணி சட்டப்பிரிவு தலைவர் டாக்டர் ஜோகன்னஸ் வெய்ஸர் வரவேற்று பேசினார். பின்னர் சைசர் ஸ்பின்டெக் எக்யூப்மென் ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரக பொருளாதார பிரிவின் தலைவர் அலெக்சான்ட்ரே கலகரோ கவுரவ விருந் தினராக பங்கேற்று பேசுகையில், “ஜெர்மனியில் உள்ளவர்களைக் காட்டி லும், இந்தியர்களின் சராசரி வருவாய் அதி கமாகியுள்ளது. இது வளர்ச்சியை காட்டுகிறது,” என்றார்.