கோயம்புத்தூர், அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் நடத்தும் உலக சாதனை நிகழ்வு ஜாய் ஆப் கிவ்விங் என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 2000க்கும் மேற்பட்ட நாட்டு நலப்ப ணித் திட்ட மாணவிகள் “EDUCATION FOR ALL” என்ற மனித உருவ வடிவமைப்பில் நின்று கல்வியின் முக்கியத்துவத் தை பறைசாற்றினர்.
5000 புத்தகத்தை கொண்டு புத்தக வடிவில் உருவகப்படுத்தப்பட்டது.
புத்தக தான நிகழ்வின் மூலம் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஒவ் வொருவரும் தலா ஒரு புத்தக நன்கொடையாக 5000க்கும் மேற்பட்ட புத் தகங்களை தானமாக வழங்கினர்.
இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதா வர வேற்றார். துணைவேந்தர் முனைவர் வி.பாரதி ஹரி சங்கர் தலைமையுரை ஆற்றினார்.
மேலும் கோவை கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் வி.கலைச்செல்வி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர். டி.ராதாபிரியா நன்றியுரை வழங்கினார்.
இந்த சாதனை கலா மின் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.