fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் நிறுவனத்திற்கு ஓ.என்.ஓ.எஸ் உறுப்பினர் அங்கீகாரம்

அவினாசிலிங்கம் நிறுவனத்திற்கு ஓ.என்.ஓ.எஸ் உறுப்பினர் அங்கீகாரம்

கோயம்புத்தூர், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் ஓ.என்.ஓ.எஸ் உறுப்பினரானதை அதிகாரப்பூர்வமாக தொடங்கினர்.

இந்திய அரசாங்கத்தின் ஒரு முயற் சியான “ஒன் நேஷன் ஒன் சப்ஸ்க்ரிப்ஷன்” என்ற அமைப்பில் அவினாசிலிங்க கல்வி நிறுவனம் பெருமைமிக்க உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது.

இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 30 வெளியீட்டாளர்கள் மற்றும் 13,000 பத்திரிகைகளிடமிருந்து அறிவார்ந்த ஆராய்ச்சிகளை வழங்குகிறது.

NEP 2020, ஆத்மநிர்பார் மற்றும் விக்ஷீத் பாரத் 2047 ஆகியவற்றுடன் இணைந்து, இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை வலுப்படுத்துகிறது.
இவ்வமைப்பின் மூலம் ஆராய்ச்சியை உள்ளடக்கியதாகவும் அணுகக்கூடியதா கவும் ஆக்குகிறது. துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் ஓ.என்.ஓ.எஸ் உறுப்பினரானதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இது நமது நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும். மேலும் இவ்விழாவில் துணை வேந்தர், பதிவாளர், நிதி அலுவலர், பல்துறை புலமுதன்மையர்கள், இயக்குநர்கள், நூலகக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உதவி நூலகர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img