fbpx
Homeபிற செய்திகள்ஏவிபிஎன் சவுத் ஆசியா சமிட் 2024 சென்னையில் துவக்கம்

ஏவிபிஎன் சவுத் ஆசியா சமிட் 2024 சென்னையில் துவக்கம்

ஆசியாவின் சமூக முதலீட்டாளர்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கான ஏவிபிஎன் அதன் சவுத் ஆசியா சமிட் 2024ஐ சென்னையில் தொடங்கியது.

சவுத் ஆசியா சமிட் 2024 என்பது ஏவிபிஎன்- இன் கையொப்ப நிகழ்வுகளில் ஒன்றாகும். இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆசியா முழுவதும் தொடர்ச்சியான பிராந்திய உச்சிமாநாடுகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இவை செப்டம்பர் 2025-ல் ஹாங் காங்கில் நடைபெறும் ஏவிபிஎன் உலகளா விய மாநாட்டில் முடிவடையும்.

‘புதிய யதார்த்தங்கள், புதிய வாய்ப் புகள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த உச்சிமாநாடு, காலநிலை நடவடிக்கை, சுகாதார தாக்கம், இளைஞர் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதாரங்கள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் தெற்காசியாவின் சமூக சவால்களை எதிர் கொள்வதில் கவனம் செலுத்துகிறது.

இரண்டு நாள் உச்சிமாநாடு செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைவர்கள், சமூக முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலர் கலந்து கொள்வார்கள். இதில் உலகெங்கிலும் உள்ள 40 அமர்வுகள் மற்றும் 90 பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏவிபிஎன் தலைமை நிர்வாக அதிகாரி நைனா சுபர்வால் பாத்ரா, “குறுக்கு-துறை கூட்டாண்மை மற்றும் புதுமையான நிதி மாதிரிகள் மூலம், ஷிஞிநி நிதி இடைவெளியைக் குறைக்க மூலதனத்தின் முழு தொடர்ச்சியையும் நாங்கள் திறக்கிறோம். முதன்முறையாக சென்னையில் உச்சி மாநாட்டை நடத்துவது உற்சாகமளிக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img