கோவையில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
வி ஒண்டர் உமன் என்ற தன்னார்வ அமைப்பு கற்பகம் பல் கலைக்கழகத்துடன் இணைந்து நான்காவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான இணைய வழி குற்றம் குறித்த 5 கி. மீ. விழிப்புணர்வு மாரத் தான் போட்டியை நடத்தியது. இதில் மாணவ மாணவிகள் உட்பட 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
இதுகுறித்து வீ ஒண்டர் உமன் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் மற்றும் அறங்காவலர் சண்முகப்பிரியா ஆகியோர் கூறும் போது,
சமூகத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இதை வலியுறுத்தி பெண்கள் விழிப்புடன் இருக்க இந்த மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று கூறினார்கள்.