fbpx
Homeபிற செய்திகள்தென்னை மகசூல் அதிகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

தென்னை மகசூல் அதிகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

கோவை அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் தென்னை மகசூல் அதிகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கும் தென்னை டானிக் மற்றும் தேனி வளர்ப்பின் பலதரப்பட்ட நன்மைகள் பற்றி அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை அரசம் பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தென்னை மகசூலை அதிகப்படுத்துவதை பற்றியும் பூச்சிகளின் மேலாண்மை பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் சொக்கனூர் மற்றும் பொட்டையாண்டிபுரம்பு கிராமத்தை சேர்ந்த பல தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தென்னை டானிக் பயன்பாடு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு அமிர்தா வேளாண் மாணவர்கள் எடுத்துரைத்தனர். சுற்றுச் சூழல் மற்றும் மண்வள பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தென்னை பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது பின்பு தேனி வளர்ப்பின் பலத ரப்பட்ட நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வானது அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில் வழிகாட்டுதல் படி நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img