fbpx
Homeபிற செய்திகள்காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி

காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி

காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற ஓவிய கண்காட்சி நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. ஓவிய கலையின் வழியாக சிறுநீர் பையில் தோன்றுகின்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

இந்த ஓவிய கண்காட்சி நிகழ்வை மெர்க் ஸ்பெஷாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் ஒத்துழைப்போடு காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.

இந்நிலையில், யூரினரி ஃப்ளோரசன்ட் ஃப்ளோ சைட்டோமெட்ரி (UFFC) என அழைக்கப்படும் ஒரு மிக சமீபத்திய தொழில்நுட்பமானது, சிறுநீர் பையில் உருவாகும் புற்றுநோயை கண்டறிவதற்கு சிறப்பாக உதவுகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தினால் கிடைக்கக்கூடிய ஆதாய அம்சங்களையும் காவேரி மருத்துவமனை வலியுறுத்தியிருக்கிறது.

சிறுநீரில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் புற்று செல்களை இத்தொழில்நுட்பம் கண்டறிகிறது.

இந்தியாவில் இத்தொழில்நுட்ப சாதனத்தை வெகுசில மருத்துவ மையங்களே கொண்டிருக்கின்றன. அத்தகைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற மருத்துவமனைகளுள் ஒன்றாக இருப்பதில் காவேரி மருத்துவமனை பெருமை கொள்கிறது.

படிக்க வேண்டும்

spot_img