fbpx
Homeபிற செய்திகள்பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு

பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் பகுப்பாய்வு கூடம் நடமாடும்
பகுப் பாய்வு வாகன பொறுப்பாளர் முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் அவர்கள் ஏற் பாட்டின்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன் றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு கூட ஆய்வக இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக், வாகன ஓட்டுனர் ரகு நாதன் உள்ளிட்ட குழுவினர், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக்கல்லூரி வளாகத்தில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில் களில் காண வேண்டிய அம்சங் கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், காணொளி காட்சிகள் வழியாகவும் விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் துணை முதல்வர் ரவி முன்னிலையில், கல்லூரி முதல்வர் முனைவர் செல் வராணி தலைமையில், உதவி ஆசிரியர் மற் றும் ஆசிரியைகள் முன் னிலையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் முன்னிறுத்தி அதில் உள்ள எல்.இ.டி. தொடு திரை வழியாக உணவு பாதுகாப்பு குறித்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்தும், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்தும் காணொளி காட்சி வழியாக திரையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலு வலர் நந்தகோபால், உண வுப் பொருட்களைக் கொண்டு குறிப்பாக தேயிலை, தேன், நெய், வெல்லம், பச்சை பட் டாணி, உள்ளிட்ட பல் வேறு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்தும், அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடுஅறிதலுடன் அயோடின் நுண்ணூட்டச் சத்து அவசியம் குறித்தும் , பொட்டலம் இடப்பட்ட பாக்கெட் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி தன்மை, சைவ அசைவ குறியீடு, நுகர் வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை காணுதல் குறித்தும் நேரடியாக உணவுப் பொருட்களைக் கொண்டு செயல் விளக்கம் செய்தனர்.

நிகழ்ச்சி இறுதியில் போதைப் பொருட்கள் தவிர்ப்பது, தடுப்பது குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. கல்லூரி நாட்டு நலப் பணிகள் திட்ட பொறுப்பாசிரியர் முருகன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img