fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே வீட்டின் அருகே வந்த பாகுபலி

மேட்டுப்பாளையம் அருகே வீட்டின் அருகே வந்த பாகுபலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினம்தோறும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானை அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களக்கரைப்புதூர் கிராமத்திற்கு சென்ற காட்டு யானை ஒரு வீட்டின் முன்பு பயிர் செய்யப்பட்டு இருந்த வாழைமரங்களை ரூசி பார்த்தது.
இதனைக் கண்ட வீட்டிலிருந்து நாய் யானையை பார்த்து குலைக்க ஆரம்பித்தது இதனால் ஆத்திரமடைந்த யானை கோபத்துடன் அங்கிருந்து வெளியேறியது. இது அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தினம்தோறும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானையை வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை என்றும் தினந்தோறும் இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதை வாடிக்கையாக உள்ளதாகவும் உயிர் சேதம் ஏற்படும் முன்னரே காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக் கையானது விடுக்கப்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img