fbpx
Homeபிற செய்திகள்பேங்க் ஆஃப் இந்தியாவின் பண்டிகைக் கால சலுகை: 400 நாள் வைப்புத் தொகைக்கு 8.10% வட்டி

பேங்க் ஆஃப் இந்தியாவின் பண்டிகைக் கால சலுகை: 400 நாள் வைப்புத் தொகைக்கு 8.10% வட்டி

பேங்க் ஆஃப் இந்தியா பண்டிகை காலத்தை முன்னிட்டு, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் சிறப்பு 400 நாள் நிலையான வைப்புத்தொகையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வங்கியின் கோவை மண்டல மேலாளர் பி.சம்பத்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக் கையாளர்களுக்கு பண்டி கைக்கால பரிசாக, சிறப்பு 400 நாள் கால வைப்புத்தொகையை ரூ.3 கோடிக்கும் குறைவான தொகையில் அறிமுகப்படுத் தியுள்ளது.

மிகவும் கவர்ச்சிகரமான ஆண்டு வட்டி விகிதத்தில் இந்த திட்டத்தை பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப் படுத்தி உள்ளது. அதன்படி, சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.10%, மூத்த குடிமக்களுக்கு 7.95%, மற்ற வாடிக்கையாளர்களுக்கு 7.45% என வட்டி விகிதத்தை அழைக்க முடியாத வைப்புத் தொகையின் கீழ் (ரூ.1 கோடிக்கு மேல் உள்ள வைப்புகளுக்கு) பேங்க் ஆஃப் இந்தியா வழங்குகிறது.

மேலும் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான விருப்பத்துடன் கூடிய வைப்புத்தொகையின் கீழ், சூப்பர் மூத்த குடிமக்க ளுக்கு 7.95%, மூத்த குடிமக் களுக்கு 7.80%, மற்ற வாடிக்கையாளர்களுக்கு 7.30% என்ற கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

சிறப்பு 400 நாட்கள் நிலையான வைப்புத் தொகை சலுகை இந்திய குடியுரிமை பெற்றவர்கள், என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு ரூ.3 கோடிக்கும் குறைவான தொகையில் வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு 400 நாட்கள் கால டெபாசிட் செப்டம்பர் 27ம் தேதி முதல் பேங்க் ஆப் இந்தியாவின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கிறது மேலும் டிஜிட்டல் சேனல்கள் (BOI Omni Neo App/ Internet Banking) மூலமாகவும் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img