fbpx
Homeபிற செய்திகள்பெல் நிறுவன ஊழியர்களுக்கு நறுவீ மருத்துவமனையில் சிகிச்சை பெற ஒப்பந்தம்

பெல் நிறுவன ஊழியர்களுக்கு நறுவீ மருத்துவமனையில் சிகிச்சை பெற ஒப்பந்தம்

ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பாக நறுவீ மருத்துவமனையும் பெல் நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மற்றும் பெல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் அருண்மொழி தேவன் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெல் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் பாபு, பெல் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அதுல் டிக்கா ஆகியோர் பங்கேற்றனர்.

வேலூர் பகுதியில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை உலக அளவில் உயர்தர சிகிச்சை அளிப்பதில் முன்னணி மருத்துவமனையாக விளங்கி வருகிறது.

இம்மருத்துவமனை எல்.ஐ.சி, உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெறும் வகையில் அந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img