fbpx
Homeபிற செய்திகள்பாரதியார் பல்கலை. கபடி போட்டி: ஈரோடு கலை - அறிவியல் கல்லூரி முதலிடம்

பாரதியார் பல்கலை. கபடி போட்டி: ஈரோடு கலை – அறிவியல் கல்லூரி முதலிடம்

பாரதியார் பல்கலைக்கழக அளவிலான கபடி போட்டி காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லூரியில் செப் டம்பர் 26, 27 தேதிகளில் நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வி.ரகுகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் அரசன், காங்கேயம் வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன், முத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில் ஆதிபன், காங்கேயம் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிககாரி முனைவர் சி.வெங்கடேஷ், காங் கேயம் இன்ஸ்டியூட் ஆப் காமர்ஸ் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஞா.சுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. போட்டியில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம் இன்ஸ்டியூட் ஆப் காமர்ஸ் கல் லூரி, பாரதிதாசன் கலை மற்றும் கல்லூரி ஆகியவை முறையே முதல் 4 இடங்களை பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு திருப் பூர் மாவட்ட கபாடி அமைப்பின் தலைவர் சண்முகம் பரிசினை வழங்கினார்.

காங்கேயம் கல்விக்குழுமத்தின் தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாசலம், தாளாளர் ஆனந்த வடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img